ஐடிஐ களில் நேரடி சேர்க்கை, வரும் 20-11- 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


Common Ranking List Phase II

Common Ranking List Phase I

ஆன்லைன் கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 1. விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள தேதிகளில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
  • அ) முன்னுரிமை கோரிய விண்ணப்பதாரர்கள் - 18.09.2020 மற்றும் 19.09.2020.
  • ஆ) பொது விண்ணப்பதாரர்கள் - 23.09.2020 முதல் 25.09.2020 வரை.
 2. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி Log-in செய்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
 3. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 நாட்கள் அவகாசத்திற்குள் அவர்கள் விருப்பம் போல் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தை மாற்றம் செய்து கொள்ளலாம். கடைசி நாள் இரவு 12.00 மணிக்குள் அவர்களது விருப்பங்களை பதிவு செய்து விட வேண்டும்.
 4. மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சமூக நலத்துறை தொழிற்பிரிவுகளை பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
 5. வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் THADCO தொழிற்பிரிவுகளை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்) (SCA) பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
 6. சிதம்பரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்) (SCA) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
 7. சீர்மரபினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள (DNT- ITIs) இடங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்) (SCA) மற்றும் சீர்மரபினர் (DNT) பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
 8. பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ST- ITIs) மற்றும் பழங்குடியினருக்கான பிரத்தியேக தொழிற்பிரிவுகளை பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
 9. ஒவ்வொரு விண்ணாப்பதாரரும் குறைந்தபட்சம் 5 தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகளை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.
 10. விண்ணப்பதாரர்களின் தரவரிசை , இன சுழற்சி முறை மற்றும் அவர்கள் கலந்தாய்வில் தேர்வு செய்த 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவுகள் போன்றவற்றின் அடிப்படையில் கணினி மென்பொருள் மூலம் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவு உறுதி செய்யப்பட்டு தற்காலிக ஒதுக்கீடு ஆணை (Provisional allotment order) வழங்கப்படும்.
 11. விண்ணப்பதாரர்கள் தங்களது தற்காலிக ஒதுக்கீடு ஆணையை இணையதளம் மூலம் பெற்ற பின்னர் அதற்குரிய சேர்க்கை கட்டணத்தை கீழ்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் செலுத்தி தற்காலிக சேர்க்கை ஆணையை (Provisional admission order) பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அ) முன்னுரிமை கோரிய விண்ணப்பதாரர்கள் - 21.09.2020 மற்றும் 22.09.2020.
  • ஆ) பொது விண்ணப்பதாரர்கள் - 27.09.2020 முதல் 30.09.2020 வரை.
 12. விண்ணப்பதாரர்கள் தங்களது தற்காலிக சேர்க்கை ஆணையை (Provisional admission order) உரிய தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கி , கீழ்காணும் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
  • a. எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (8th / 10th Marksheet).
  • b. சாதிச்சான்றிதழ் / Community Certificate.
  • c. மாற்றுச்சான்றிதழ் / Transfer Certificate.
  • d. இடப்பெயர்வு சான்றிதழ் / Migration Certificate (if applicable).
  • e. முன்னுரிமைச்சான்றிதழ் / Priority Certificate (if applicable).